பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவாஜ் செல்லையா

31



நடுவர் சுண்டி மேலே சென்று கீழே விழுந்த நாணயத்தை, எந்தக் குழுத் தலைவனும் சென்று தொடவோ எடுக்கவோ கூடாது.

நாணயம் சற்று கனமுடையதாக இருப்பது நல்லது. (இலேசாக இருப்பதை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயப்பதாகும்.)

3. ஓடி விரட்டுபவர் ஒருவரைத் தவிர, மற்ற எட்டு விரட்டுபவர்களும், ஒவ்வொரு சதுரக் கட்டத்தினுள்ளே உட்கார வேண்டும். அதாவது அடுத்தடுத்துள்ள கட்டத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் இரண்டு பேரும் ஒரே திசையைப் பார்த்துக் கொண்டிருப்பது போல உட்காரக் கூடாது.

எட்டு பேர்களும் உட்கார்ந்த பிறகு, ஓடி விரட்டுவதற்காக இருக்கின்ற ஒன்பதாவது ஆட்டக்காரர், ஏதாவது ஒரு நீண்ட சதுரப் பகுதியில் சென்று, விரட்டுவதைத் தொடர்வதற்காக நின்று கொண்டிருக்க வேண்டும்.

4. ஓடும் வாய்ப்பினைப் பெற்ற குழுவினரில், முதலில் ஓடும் வாய்ப்பினைப் பெற்ற முதல் மூவரும் ஆடுகள எல்லைக்குள் சென்றுவிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/33&oldid=1377425" இலிருந்து மீள்விக்கப்பட்டது