பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கோகோ ஆட்டம்


22. விரட்டுவதற்காகக் கட்டங்களில் உட்கார்ந்திருக்கும் ஆட்டக்காரர்களை, ஓட்டக்காரர்கள் தொடவே கூடாது. அவ்வாறு தொடுகின்றவர் முதல் முறையாக எச்சரிக்கப்படுவார்.

அவ்வாறு தொடுகின்ற தவறையே மறுமுறையும் செய்கின்ற அந்த ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார் (Out).

23. ஆட்டத்தில் உள்ள எந்த விதிகளையும் மீறாமல் ஒரு ஓட்டக்காரரை ஓடி விரட்டுபவர் கையால் தொட்டு விட்டால், தொடப்பட்ட ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார் (Out).

ஆடுகள எல்லைக்கு வெளியே போனாலும், வெளியே போன ஓட்டக்காரர், ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்(Out).

வெளியேற்றப்பட்டார் என்பதை நடுவர் சிறு ஒலியால் விசில் மூலம் குறிப்பிட்டுக் காட்டுவார். அதே சமயத்தில் ஏதாவது ஒரு கையின் ஆள்காட்டி விரலை உயர்த்தி வெளியேற்றப்பட்டதை சைகை மூலம் காட்டுவார்.

24. ஓடி விரட்டுபவரும், அவரது குழுவைச் சேர்ந்த மற்ற உட்கார்ந்திருப்பவர்களும் முன்னர் கூறியுள்ள விதிகளை மீறவே கூடாது.

அவர்களுக்காகக் கூறப்பட்டுள்ள விதிகளில் ஏதாவது ஒரு விதியை மீறினாலும், அது ‘தவறு’ (Foul) என்றே கருதப்படும்.

தவறு செய்தபடி ஒரு ஓட்டக்காரரைத் தொட்டு விட்டாலும், அல்லது தொடுவதற்காக எடுத்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/38&oldid=1377446" இலிருந்து மீள்விக்கப்பட்டது