பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

45


வந்து அவர்களுக்கென்று அமைக்கப்பட்டுள்ள இடத்தில் (Block) போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

11. போட்டி ஆட்டத்தின் முடிவை நடுவர் அறிவிக்கும் வரை, போட்டியிடும் குழுக்கள், ஆடுகள மையத்தை விட்டு சென்றுவிடக் கூடாது.

V. ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகள்

ஒரு நடுவர், இரண்டு துணை நடுவர்கள், 1 நேரக் காப்பாளர் (Time Keeper), ஒரு வெற்றி எண் குறிப்பாளர் ஆகியோர், ஒரு போட்டி ஆட்டத்தை நடத்திக் கொடுக்கும் அதிகாரிகளாகப் பணியாற்றிட போட்டியை நடத்தும் குழுவினர், நியமிக்க வேண்டும்.

1. துணை நடுவர்களின் கடமைகள் (Umpires)

1. நிற்கும் இடம்: ஆடுவதற்குரிய ஆடுகளத்தின் வெளிப்புறத்தை ஒட்டியுள்ள தொடரிடத்தில் (Lobby) ஒரு துணை நடுவர் நின்று கொள்ள வேண்டும். அடுத்த துணை நடுவரும் மறுபுறம் உள்ள தொடரிடப் பகுதியில் போய் நிற்க வேண்டும்.

2. நடுக்கோட்டால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொண்டு ஆட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

3. தொடரிடத்தில் அங்குமிங்குமாகச் சென்று விரட்டும் ஆட்டக்காரர், மற்றும் ஓட்டக்காரர் செயல்களையும் அசைவுகளையும் துணை நடுவர்கள் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

4. தன்னுடைய கட்டுப்பாட்டிற்கும் மேற்பார்வைக்கம் உள்ள பகுதியில் நடப்பவைகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/47&oldid=1377645" இலிருந்து மீள்விக்கப்பட்டது