பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கோகோ ஆட்டம்


நல்ல முடிவினைக் கூறுவதோடல்லாமல், அடுத்த பகுதியில் நடப்பவைகளுக்கும் நல்ல முடிவினை எடுக்க மற்றத் துணை நடுவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

5. ஓடி விரட்டுபவரின் தவற்றினைச் சுட்டிக் காட்டுவதுடன் நின்றுவிடாமல், தவறிழைத்தவரை திருத்திக் கொள்ளச் செய்து அவரை விதிகளின்படி செயல்படத் தூண்டி உதவ வேண்டும்.

6. தவறுகள் நேரும் பொழுது, விட்டுவிட்டு ஒலிக்கும் விசில் ஒலி மூலம் (Short Whistle) தவறை வெளிப்படுத்திக்காட்டி, அந்தத் தவறு நிவர்த்திக்கப்படும் வரை, விசில் ஒலி நீடித்துக் கொண்டேயிருக்குமாற விசிலை பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு ஓட்டக்காரர் தொடப்பட்டு விட்டால், அதை மெல்லிய விசில் ஒலியால் (Short and Sharp Whistle) வெளியேற்றப்பட்டார் (Out) என்று அறிவிக்க வேண்டும்.

8. ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆடுகள எல்லைக்குள் சென்றுவிட்டாலும், உடனே ஆட்டம் தொடர்ந்து நடக்க இடையூறின்றி தொடரிடத்திற்கு அவர் வந்து விடவேண்டும்.

இனி, நடுவரின் கடமைகள் என்னென்ன என்பகைக் கவனிப்போம்.

2. நடுவர் (Referee)

1. நடுவரானவர் வெற்றி எண் குறிப்பேட்டை முதலில் சரி பார்த்து விடுவது போலவே, ஆடுகளத்தையும் சரிவர குறிக்கப்பட்டிருக்கின்றதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/48&oldid=1377478" இலிருந்து மீள்விக்கப்பட்டது