பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

49


முறையைக் குறித்துக் கொண்டு, அதே வரிசை முறையில் ஒழுங்காக ஆடுகளத்தினுள் அவர்கள் நுழைகின்றார்களா என்பதை குறிப்பாளர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

2. தொடப்பட்டு வெளியேற்றப்படும் ஓட்டக்காரர்களின் வரிசை முறையைக் (Order) குறித்து வைத்துக் கொண்டு, அவர்களை ஆடுகளத்திற்கு வெளியே அவர்களுக்குரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும்.

3. ஒவ்வொரு ஆடும் வாய்ப்பு (Turn) முடிந்த பிறகு, வெற்றி எண் குறிப்பேட்டை (Score - Sheet) செவ்வனே குறித்து வைத்துவிட்டு, பின்னர், விரட்டுவோருக்கான குறிப்பேட்டையும் தயார் செய்ய வேண்டும்.

4. போட்டி ஆட்டம் முடிவடைந்த பிறகு, குறிப்பேட்டை சரியாக முடித்து வைத்து, ஆடிய இரு குழுக்களும் பெற்றிருக்கும் வெற்றி எண்களின் பட்டியலைத் தயார் செய்தும், ஆட்டத்தின் முடிவை எழுதியும் பதிவு செய்து முடித்து வைக்க வேண்டும்.

5. அதன்பின், நடுவரிடமும், துணை நடுவர்களிடமும் கையொப்பம் பெற்று, குறிப்பேட்டை முழுமை செய்து வைக்க வேண்டும்.

6. ஒவ்வொரு முறை ஆட்டத்தின் இறுதியிலும் ஆட்டக் குறிப்பேட்டை நடுவரிடம் தந்து வெற்றி எண்களை சரிபார்க்கச் செய்து அவரது ஒப்புதலையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுக் குறிப்பு: போட்டி ஆட்டம் தொடங்கிய பிறகு, ஆட்ட அதிகாரிகளில் யாராவது ஒருவருக்குப் பணியாற்றுதற்கேற்ற இயலாமை ஏற்பட்டுவிட்டால், மற்ற அதிகாரிகள் அந்த சூழ்நிலையை அனுசரித்து அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/51&oldid=1377487" இலிருந்து மீள்விக்கப்பட்டது