பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கோகோ ஆட்டம்



ஊன்றிவிட்டாலும் கை ஒடிந்து போகும். அல்லது கால்களில் மூட்டுக்கள் பிசகிக் கொள்ளும். இதை எப்பொழுதும் பயன்படுத்த முடியாது.

அபாயகரமான ஆட்டமுறை என்பதால் எப்பொழுதோ ஒருமுறை மிகவும் இக்கட்டான, முக்கியமான சமயத்தில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தத் திறனாற்றலை யாரும் சிபாரிசும் செய்வதில்லை. 'ஆட்டக்காரர்கள் ஆபத்துக்குள்ளாகிவிடுவார்கள். நமக்கேன் இந்த வம்பு' என்று யாரும் சொல்லித்தர முன்வருவதுமில்லை.

இந்த ஆட்டமுறையை முதலில் தண்ணீரில் விழுந்து பழகிக் கொள்ள வேண்டும். தாவி விழும் போது (ஓட்டக்காரரைத் தொட்ட பிறகு) முதலில் இரு கைகளையும் தரையில் உள்ளங்கைகள் படுவதுபோல ஊன்றி அதே சமயத்தில் பாதம் முழங்காலுக்கு மேலே உள்ள தொடைப்பகுதிகள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தரையை நோக்கி வரவேண்டும்.

கைகளை ஊன்றும்போது மிகவும் பத்திரமாக ஊன்ற வேண்டும். கைகளின் வலிமையில்தான் இந்தத் தாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/92&oldid=1377465" இலிருந்து மீள்விக்கப்பட்டது