பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கோகோ ஆட்டம்



செய்து தப்பித்துக் கொள்வதுடன், அவர்களது ஆட்ட நோக்கத்தையும் வீணாக்கிக் காலம் கழித்துவிட வேண்டும்.

5. அதிக தூரம் ஓடினாலும், அதிக நேரம் ஆடினாலும் களைத்துப் போகாத நெஞ்சுரம் (Stamina) உள்ள ஓட்டக்காரர்கள், இவ்வாறு ஏமாற்றி ஆடுகின்ற ஆட்டத்தை மேற்கொள்ளாமல், வேறு வழியில் ஆடினால், நன்றாக இருக்கும். இவர்கள், சங்கிலித் தொடர்போல உட்கார்ந்திருப் பவர்களுக்கு இடையே சுற்றி ஓடும் பாம்பின் ஓட்ட முறையை (Serpentine chain) பின்பற்றி ஓடுவதுதான் நல்ல ஆட்டத்திறனாகும். இந்த பாம்போட்ட முறையானது, விரட்டி வருபவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, உட்கார்ந்திருப்பவர்களிடையே மாறி மாறி ஓடி வருவதுதான்.

இதனால் என்ன லாபம் என்றால், ஆள் அருகில் வரும்போது வேகமாக ஓடலாம். அவசியம் இல்லை யென்றால் மெதுவாக ஓடலாம். இந்த பாம்போட்ட முறையில், விரட்டி வருபவரின் வேகத்திற்கு ஏற்ப வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் ஓட வசதியுண்டு. இப்படி ஓடுபவரை, ஒருவரே விரட்டி வருபவராக கூடவே வந்து விரட்டவும் முடியாது. தொடர்ந்தாற்போல் கோ கொடுத்து ஆள் எழுப்பித்தான் தொடர்ந்து தொட வந்தாக வேண்டும். இதனால் அவர்களுக்குக் காலதாமதம் ஏற்படும். ஆகவே, அதிகமான நெஞ்சுரம் உள்ளவர்கள் சங்கிலித் தொடர் ஓட்ட முறையைப் பின்பற்றி ஆடலாம். ஆடவும் வேண்டும்.

6. சங்கிலி ஓட்ட முறையைப் பின்பற்றி ஓடுபவர்கள் இன்னொரு குறிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/98&oldid=1377536" இலிருந்து மீள்விக்கப்பட்டது