பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு ஐயப்ப பக்தனைப் போல்.... விடிந்ததும் ஒரு ஐயப்ப பக்தனைப் போல் அவசரமாய்க் குளிக்கிறேன்... ஒரு நாடக நடிகனைப்போல் கண்ணாடி முன் நிற்கிறேன்.... ஒரு கல்லூரி மாணவனைப்போல் காத்திருக்கிறேன். Ο விடிந்ததும் - ஏன் நான் இப்படிப் பரபரக்கிறேன்...? புதிதாய் வெளிநாட்டுக்குப் போகும் ஒரு வியாபாரியைப் போல் - 100 0 மீரா