பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற்கட்டை மறுபடி 'உடன்கட்டை யாக்குவதா? அண்மையில் ஜெய்ப்பூர் மண்ணில் கணவனுடன் சேர்ந்து காரிதை ஒருத்தி உடன்கட்டை ஏறினாள் உற்றாரும் உறவினரும் ஊராரும் வாழ்த்தினார். இந்த அதிசயத்தை அல்ல - அநியாயத்தை காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை.... உடனடியாய்த் தடுக்கவில்லை..... தவிர்க்கவில்லை... சதி என்ற சண்டாளப் பழக்கத்தை பெண்ணடிமைத் தனத்தின் பெரிய கொடுமையினைச் சிதைத்தொழிக்க சென்ற நூற்றாண்டில் சட்டம் கொண்டுவந்தார் பெண்டிர்க்கு உதவிட ஒரு பெண்டிங் பிரபு.... இந்த நூற்றாண்டில் அந்தச் சட்டத்தையும் சேர்த்து உடன்கட்டை ஏற விட்டோம் இந்த இலட்சணத்தில் இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கிப் போகப் போகிறோம்! கோடையும் வசந்தமும் O. 107