பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ෆ பூவையொருத்தி பொங்கு மிளமையில் பூவையிழந்து பொட்டை யிழந்து விதவை ஆனால் வெள்ளுடை பூண்டு கதவைத் தாண்டா திருக்க வேண்டுமாம் ஆனால் பெண்டையிழந்த பெரிய மனிதன் துண்டை உதறித் தோளில் போட்டு சின்னப் பெண்ணைத்தேடி மணந்து இன்னொரு முறையவன் இன்புறலாமாம் சாண்பிள்ளை யெனினும் ஆண்பிள்ளை என்று சாற்றித் தினமும் ஏ மாற்றி எளிதாய் கோவலன் சீவகன் ஆகக் கூடுமாம் காரிகை மட்டும் கண்ணகி யாகவே இருக்க வேண்டுமாம். எத்தனை கொடுமை! உரிமை என்பது ஒருவழிப் பாதையா கட்டுப்பாடும் கற்பும் உங்கட்குத் தட்டுப் பாடு தானா? என்றே ஆடவர் முகத்தில் அறைந்தாற் போலக் கேட்டுத் துணிவாய்க் கிளர்ச்சி செய்யும் மங்கையர் இயக்கம் மலர வேண்டும் Ο மோனை நயம்பட முட்டாள்தனமாய்ப் பானை பிடித்தவள் பாக்கிய சாலியென்று ஏனைத் துறைகள் எல்லாம் ஆடவர் எடுத்துப் புசித்தே ஏப்பம் விடுவதைத் தடுத்து நிறுத்தும் தைரியம் வேண்டும் 108 C 18gir