பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர்தம் தூய் நலம் பேண எழில் மலர்ச் சிறார்களை இனிதாய் வளர்க்க மங்கையர் அரசியல் மகத்துவம் காணச் சங்கம் அமைத்துச் சாதனை புரிந்த தோழர் லெனினின் வாழ்க்கைத் துணைவி க்ரூப்லக் காயா ஆக வேண்டும் க்ரூப்ஸ்க் காயா ஆக வேண்டும். ஈர மனமிலா ஏகாதி பத்தியம் வீர வியத் நாம் வீதியில் நடத்திய கோர மான குண்டுவிளை யாட்டைக் கண்டு வெகுண்டு கண்டனம் செய்தே ஆர்ப்பாட்டப்போர் அணியை வகுத்த அருணா ஆசப் ஆக வேண்டும் அருணா ஆசப் ஆக வேண்டும் தொடுக்கப் பட்ட துயர்க்கணை தாங்கி ஒடுக்கப் பட்டவர் உரிமைக் காக நிறவெறி பிடித்த நீசரை எதிர்த்தே அறநெறி நின்று சங்கம் முழக்கிய அஞ்சலா டேவிஸ் ஆக வேண்டும் அஞ்சலா டேவிஸ் ஆக வேண்டும். பெண்ணே புதுயுகப் பெண்ணே! அஞ்சலா டேவிஸ் அருணா ஆசப் க்ரூப்ஸ்க் காயா வாலெண்டீனா இந்திரா சரோஜினி இவர்களை எல்லாம் நெஞ்சில் பச்சைகுத்தி நிறுத்து O 110 0 மீரா