பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னோடு போயிற்று உள்ளூரில் முடிவெட்டுவது.... Ο உன்னிடத்தில் தலையை மட்டுமல்ல செவியுைம் கொடுத்துவிட்டுச் சிவனே என்றிருந்தால் மயிரை மட்டுமல்ல நகரச் செய்திகளையும் கத்தரித்துப் போடுவாய் கனகச்சிதமாய். ஒரு கிராமத்துத் திருமணப் பத்திரிகையில் வரும் தாய் மாமன்களின் பெயர்களைப் போல உன் கடையில் எப்போதும் கூட்டம்.... தேநீர் குடித்துவிட்டுத் தினத்தந்தி படிக்க ஒசியில்.... சும்மா தினம் தினம் முடியுமா முடிவெட்ட? Ο ஒவ்வொரு முறையும் நீ முடிவெட்டி முடித்து மீசையைக் கத்தரித்துவிட்டு மாப்பிள்ளை மாதிரி இருக்கிறீர்கள் என்பாய்; Iớ8 C tổgữ