பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயத்தைச் சாய்த்துத் துகள்துளாய் ஆக்கிட அவன் சுட்டான். கங்கை காவிரியை போக்கொழிந்து போயொழியச் சுட்டான். நான் என்ன சொல்ல? பசித்தவர்க்குச் சோறாய் தாகத்தால் தவித்தவர்க்கு நீராய் சுரண்டிப் புசித்தவர்க்குக் கணையாய் பொய்ம்மைக்கும் புரட்டுக்கும் அணையாய்..... இருந்தாய்.... அம்மா.... இன்று நான் என்ன சொல்ல? நான் என்ன சொல்ல? இந்திராகாந்தி சுடப்பட்டபோது சிவகங்கையில் நடந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வாசித்தது. கோடையும் வசந்தமும் O 155