பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெல்லுவதை இரக்கமின்றிக் கொல்லுவதை வீரம் என்று நினைத்ததெல்லாம் பொய்யாக்கி உயிர்களிடம் அன்பு வைத்து ஈ எறும்பைக் கூடக் கொல்லாத இரக்கமனம் கொண்டவரை ஈகை மதம் கண்டவரை மகாவீரர் என்றே வையம் துதிக்கிறது. கொஞ்சம் கொடுத்தால் நன்கொடை கூடக் கொடுத்தால் கொடை அள்ளிக் கொடுத்தால் வள்ளன்மை ஆனாலும் அருட்பெருஞ்சோதி வடலூர்க் கருணை நிதி வாடிய பயிரைக் கண்டபோது வருந்தியதால் வள்ளலார் என்றே வையம் மதிக்கிறது. மாவீரர் ஆவதற்கும் வள்ளலார் ஆவதற்கும் ஒரே ஒரு வழி இரக்கத்தை வளர்ப்பது தான். குடுகுடு கிழவர்களை கூன்விழுந்த கிழவர்களைத் தொண்டு கிழம் என்பார்கள். கோடையும் வசந்தமும் O 171