பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்பு நிலா உன் வானத்திலே (புறம்) கங்கை பாயும் பாரதமே கறுப்பு நிலாஉன் வானத்திலே எங்கும் சுரண்டல், சுதந்திரத்தோ(டு) ஏழ்மை வந்தது விமானத்திலே! அங்கம் குறைக்கும் தொழுநோயாய் அரசியல் நடக்கும் ஈனத்திலே இங்கு மகாத்மா திரும்பி வந்தால் தலைகுனி வார் அவ மானத்திலே! (அகம்) கடலில் பிறந்த வெண்முகத்தே கறுப்பு நிலாஉன் வானத்திலே! மடலில் தாழையாய் மனங்கவர்ந்தாய் வசப்பட் டேன்உன் நாணத்திலே! குடலில் பசியாய் அரவணைப்பேன் குடிமகன் நான் இதழ்ப் பானத்திலே! உடலில் உயிர்நீ என்றுன்னை உயர்த்தி வைப்பேன் உப மானத்திலே! கோடையும் வசந்தமும் 0 177