பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவர் கொச்சையாய் உரைப்பதும் சரியே! மழைநீர் இல்லையேல் உழவிருக் காது உழவிருக் காதெனில் விளைவிருக் காது விளைவிருக் காதெனில் வறுமை வளர்ந்திடும் வறுமை வளர்ந்திடில் மானம் பறந்திடும் ஆதலால் கெடுப்பதும் மழைநீர் கெட்டார்க்கு வாழ்வு கொடுப்பதும் மழைநீர் கொல்லும் பசியெனும் நோயும் மழைநீர் நோயைக் கொல்லும் மருந்தும் மழைநீர் வயிற்றுத் தீயைத் தணிக்கும் உணவை ஆக்கித் தருவதும் தானே உணவாய் இருப்பதும் மழைநீர்! 184 0 மீரா