பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நல்ல பாணனின் இசையில் சரியாய் பாவமும் ராகமும் தாளமும் ஒன்று சேர்ந்திருப்பது போல் அறிவும் ஆற்றலும் அரவணைக்கம் குணமும் ஆகாய மனைய மனமும் உன்னிடம் கொலுவிருக்கக் காண்கிறேன். என்னுள் மாணிக்க விளக்கை ஏற்றும் உன் அருள் விழியை நோக்குகிறேன். நீ ஒரு தெய்வச் சிலையாய்த் தென்படுகிறாய். அன்றன்று அருகிருந்து ஆராதனை செய்யும் ஆர்வத்துடிப்புடன் காத்திருப்போர் ஆயிரம் ஆயிரம் பேர்.... நான் விலகி நின்றாலும் வெகுதூரம் சென்றாலும் உன் காந்த சக்தியில் கட்டுண்டு நிற்கிறேன்.... தோற்றத்தில் மூர்க்கமாய் முரண்பட்டுத் தோன்றும் யாளியும்கூட நல்லதோர் வீணை நாதத்துக்கு மயங்குவதுபோல் நான் உன் ஆளுமையில் கிறங்குகிறேன். உன் கோயிலின் கருவறை வரை வந்து நிற்கும் போதெல்லாம் என்னுள் இருந்தோ 194 0 மீரா