பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் உன்னிடம் வட்டமடிக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் வந்தேன்.... இப்போது ஒரு வானம்பாடியாய்ச் சிறகடிக்கிறேன் பறக்கும் வெளிகளிலெல்லாம் பார்க்கும் உயிர்களிடமெல்லாம் உன் தயவை உச்சரித்துக்கொண்டே போவேன். நான் உன்னிடம் சீர்பரவும் ஒரு தொண்டனாய் வந்தேன்... இப்போது ஒரு தூதுவனாய்ச் செல்கிறேன். செல்லும் இடங்களிலெல்லாம் சேரும் மனிதர்களிடமெல்லாம் உன் ஆன்மநேயச் செய்தியை அமுதமாய் வழங்கிக் கொண்டே போவேன். விடைபெறும் இந்த வேளையில் ஆனந்தக் கண்ணிருடன் நெடுநேரம் உன்முன் நிற்கும் என்னிடம் ‘என்ன உன் வேண்டுதல்’ என்கிறாய்.... ‘எப்பாரும் எப்பதமும் எங்ங்ணும் நான்சென்றே எந்தை நினதருட் புகழை, இயம்பி இசைத்திடல் வேண்டும்' என்கிறேன். 'அப்பா அப்பா அப்பா என்கிறேன்... நான்புறப்படுகிறேன். ஓம் சக்தி தீபாவளிமலர் அக்டோபர் 1998 196 0 மீரா