பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றாய் நனைய வேண்டும்; நயமாய்க் கவிதைகள் நான் நாற்பதாயிரம் புனைய வேண்டும். என்னை மெல்ல விழுங்கும் உன் செல்லக் கண்களை முத்தம் கொடுத்து முகர்ந்து பார்த்துப் பித்தம் பிடித்துக் கிடக்க வேண்டும்; பெரிய மன்மதக் கூத்து நடக்க வேண்டும். உன் கொட்டாத கறுப்பு நீர் வீழ்ச்சியைக் கோதிக்கோதி விட்டு ஒரு குழந்தையைப் போல் உனை அள்ளி எடுத்து அனைத்து அப்படி இப்படிக் கொஞ்சவேண்டும்; நீ கெஞ்ச வேண்டும். நுங்கின் மென்பதம் தங்கும் உன் இதழ்களை..... விட்டு விடுகிறேன்.... நீ சிணுங்குகிறாய்.... என் கண்ணே, நீ இல்லாவிட்டால் என்னால் வாழமுடியாது! Ο என் விழிவிளக்கின் சுடர் கரைந்து மங்கும் ஒடுங்கும் 198 C மீரா