பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழில் சிலகாலம் பணிபுரிந்திருக்கிறார். ஆசிரியர் கழகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் மீரா MUTA என்ற ஆசிரியர்கள் இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்களில் மீராவும் ஒருவர். MUTA இதழ் ஆசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மீராவின் இன்னொரு வெற்றி அன்னம், அகரம் பதிப்பங்கள் நிறுவிய சாதனை தான். ஒரு சிறிய ஊரில் புத்திலக்கிய வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. புதுக்கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், கலை, தத்துவம், வரலாறு என்று அனைத்துத் துறைகளிலும் தன் பதிப்புக் கொடையை அள்ளித் தந்துள்ளார் மீரா. மீராவுடைய பதிப்பகம் மட்டும் தோன்றாமல் இருந்திருந்தால், பல படைப்புகள் வெறும் பேனா முனை எழுத்துக்களாகவே மறைந்து போயிருக்கும். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்கள் விற்காத நிலையிலும், அந்தப் பணியை இன்றைக்கும் செய்து கொண்டே இருப்பதுதான், மீராவின் எழுத்துத் துணிச்சல். மீரா ஆங்கில இலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். “சரோஜினி நாயுடு, ஜிப்ரான், உமர் கய்யாம் படைப்புகள் மிகவும் பிடிக்கும். சரோஜினி நாயுடுவின் கவிதைகளை மொழி பெயர்த்து வைத்திருக்கிறேன். அவை இன்னும் அச்சில் வெளிவராமல் இருக்கின்றன. வெளிக் கொணரவேண்டும் என்பதே என் நீண்டநாள் ஆசை' என்கிறார் மீரா. அத்துடன், தான் எழுதியுள்ள கட்டுரைகள் பல தொகுத்து வெளியிடப்படாமல் இருப்பதையும் அடிக்கடி நினைவு கூர்கிறார். பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருது என்று இன்னும் பல விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன. 203