பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேருந்துப் பெட்டித் திருடர்கள். திருச்சியைச் சேர்ந்தவர்கள். பேசிப் பாருங்கள் என்றார். பறிகொடுத்த என்மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. கண்ணிர் வருவது போல் இருந்தது. துடைத்துக் கொண்டேன். மெல்ல அவர்கள் பக்கம் சென்று பேட்டி எடுப்பது போல் விசாரித்தேன். 'என் பெட்டியை யார் திருடியிருப்பார்கள் என்று கேட்டேன். மெளனமாயிருந்தார்கள். 'கண்ணதாசனைத் தெரியுமா என்றேன். தெரியும் சினிமாப் பாடல்கள் எழுதுபவர் தானே என்றார்கள். ஆமாம், அவர் ஒரு பெருங்கவிஞர். அவர் மாதிரி நானும் ஒரு கவிஞன். என் பெட்டியில் கைப்பையில் பணமும் கோவையில் உள்ள என் வீட்டுச் சாவிக் கொத்தும் இருந்தன. ஒரே ஒரு வேட்டி இருந்தது. மற்றவை எல்லாம் கவிதைகள் கட்டுரைகள் எழுதிய தாள்கள் தான். நீங்கள் பெட்டியைத் திருடினால் என்ன செய்வீர்கள். பணத்தை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் பெட்டியில் உள்ள முகவரிக்கு அனுப்பமாட்டீர்களா என்று கேட்டேன். அதெல்லாம் எங்கள் வேலை இல்லை. பணத்தை நகையை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் பெட்டியோடு சேர்த்து ஏதாவது கழிப்பறைப்பக்கம், ஆற்றங்கரை, கண்மாய்க் கரைப்பக்கம் தூக்கி எறிந்து விடுவோம்’ என்றார்கள். எனக்கு திகில் ஏற்பட்டது. பணம் போனது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால்.... கோவையில் அலுவலகம் போனநேரம்போக வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் என் கவிதைகளையும் கட்டுரைகளையும் செப்பம் செய்யலாம், முடிந்தால் தட்டச்சில் அடிக்கச் சொல்லலாம் என்று கொண்டு போயிருந்தேன். பாரதியைப் பற்றிய இரண்டு கட்டுரைகள், பாரதியைப் பற்றி, நபிகள் நாயகம் பற்றி, கலைஞர் பற்றி எழுதியிருந்த கவிதைகள் சில குக்கூக் கவிதைகள். 23