பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று ஆண்டுகளுக்கு முன் (தேதி நினைவில் இல்லை) பொள்ளாச்சியில் பெரும் மக்கள் கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் என்னும் விருதளித்து என்னைப் பாராட்டினார். 45ஆண்டுகளுக்கு முன்பு நான் தொகுத்த என் கல்லூரி வெள்ளி விழா மலர்த் தலையங்கத்தைப் படித்துவிட்டு உயர்ந்த உள்ளத்துடன் என்னைப் புகழ்ந்து எழுதிய நாளிலிருந்து எங்கள் நட்பு நங்கூரம் போட்டது போல் நிலைத்து நிற்கிறது. 'பல்லாண்டு வாழ்க என்று என்னை வாழ்த்தி யிருக்கிறார். வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் வாழ்ந்து பார்க்கிறேன். கவிஞர் தேனரசன் எனக்குப் பிடித்த மற்றொரு துடிப்புள்ள வானம்பாடிக் கவிஞர். சிற்பியின் அடியார்க்கு நல்லாரான இவரும் ஒரு பொள்ளாச்சிக்காரர். இவருடைய வெள்ளை ரோஜாகவிதைத் தொகுப்பை பல ஆண்டுகளுக்கு முன் அன்னம் வழியாக நான் தான் வெளியிட்டேன். இப்போது கவிதா பதிப்பகம் மூலம் மண் வாசல் என்னும் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். அதை ஆனந்தமாய்ப் படித்து அனுபவித்து ஒரு கடிதம் எழுதினேன். ஆளை மயக்கும் கொங்குநாட்டுத் தமிழையும் அவருடைய கிராமியத்தையும் புகழ்ந்திருந்தேன். சிற்பி என் கோடையும் வசந்தமும் தொகுப்புக்கு அணிந்துரை எழுதுகிறார். அவர் வீட்டுக்கு ஒரு எட்டு நடந்து போய் அத்தொகுப்பைப் படித்துவிட்டு நீங்கள் மதிப்புரை எழுதிக் கொடுங்கள் என்று கவிஞர் தேனரசனிடம் பேசியில் கேட்டுக்கொண்டேன். என் ஆதி முதல் அந்தம் வரும் இந்த நாள் வரை என் கவிதைகளில் கண்ட சிறப்புகளை அடுக்கியுள்ளார். அழகொழுக எழுதியுள்ளார். 27