பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் நம் அப்பனுக்கும் அப்பனுக்கும் அப்பனுக்கும் முன்னோன் ஆன மனிதன் - ஆதி மனிதன் ஏதேன் தோட்டத்தில் என்னமாய் இருந்தான்! கைத்தறியோ கதரோ கண்கவரும் குவாலியர் மில்துணியோ எதுவுமே தேவையின்றிச் செலவின்றி அம்மணமாய் இருந்தான்! ஆனந்தமாய் வாழ்ந்தான்! பசி இல்லை பகை இல்லை பஸ் கட்டண உயர்வில்லை ரேஷன் இல்லை, க்யூ இல்லை கடை இல்லை கடன் இல்லை காவல்துறை இல்லை கற்பழிப்பும் இல்லை ஸ்டவ் இல்லை, வரதட்சணைச் சாபம் இல்லை சதி இல்லை தேர்தல் இல்லை கட்சி இல்லை தெருவில் எங்கும் கொடிகள் இல்லை தேர்வு இல்லை காப்பி இல்லை தேசம் இல்லை சண்டை இல்லை.... «of L_L-ГТ, ஆதி மனிதன் கோடையும் வசந்தமும் C 49