பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் இரத்தத்தை உறிஞ்சியதை விட வியர்வையில் செழித்து நிமிர்ந்த சிலியின் செந்நெல் வயல்களை டாலர் வெள்ளம் புகுந்து நாசம் புரிந்ததை நினைத்தே உனது நெஞ்சம் துடிதுடிக்கும் இப்போதும். O நீ விடுதலைப் புறாவைப் பறக்க விட்டாய்; பார்த்துக் கொண்டிருக்குமா பாசிசக் கழுகு? உன்னையே கொத்தித் தின்று விட்டது. Ο நீ ஆதிக்கப் பாம்பை அடித்துக் கொல்லாமல் மகுடி ஊதி மடக்கப் பார்த்தாய்; உன்னையே சீறித் தீண்டிவிட்டது. ○ நீ சோஷலிசத்துக்குப் 58 O மீரா