பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் தீராத பக்கங்களை ஓயாமல் நேசிக்கும் உயிர்ச் சிநேகிதன் - அமர காதலன். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் மீராவைக் குறித்து.... 烹 •్య சிவகங்கை மன்னர் கல்லூரிப் பேராசிரியர் மீரா தம் கல்லூரி மலருக்கு ஆசிரியராக இருந்தார். அவர் எழுதிய ஆசிரியர் உரை தற்செயலாக என்பார்வைக்கு வந்தது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நறுக்குத் தெறித்த உரைநடை வரிகளில் தடுக்கி விழுந்த நான் பின்னர் எழவே இல்லை. அப்படி ஆரம்பித்த அன்பின் உற்சாகம் எங்கள் நட்பு. எழுத்தில் துளிர்த்த நட்பு இலக்கிய நட்பாய், குடும்ப உறவாய், உயிரின் தோழமையாய்ச் செழித்து வளர்ந்தது. ஒடி ஒடிச் சந்திப்பதும், ஒன்றி மகிழ்ந்து குதூகலிப்பதும் இயல்பாய்ப் போனது. பதிப்பகம் ஒரு அசுவமேத யாகமாய் அவரால் வளர்க்கப்பட்ட போது, குதிரை போகும் திசைகளில் எல்லாம் வில்லும் அம்புமாய்த் திரிந்தவன் நான். வானம்பாடியும், அன்னம் விடுதுதும் மேலும் எங்களின் சிநேகிதத்தை நெருக்கி நெசவு செய்தன. சர்ப்பயாகம் முதல் சூரிய நிழல் வரை என் கவிதை நூல்களை அச்சாக்கி அசலாக்கித் தந்த பெருமிதம் அவருடையது. ரகுமானும் நானும் மீராவும் வளர்த்துக் கொண்ட சகோதர பாசம் வாழ்வின் இன்ப நெகிழ்வு அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும். 岑 જૂજ மீராவின் படைப்புலகம் ஒரு வர்ணச் சித்திரமல்ல வர்ண விசித்திரம்,