பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவன் அகரம் அவன்.... அனைத்துக்கும்; யாராலும் தொடமுடியாச் சிகரம் அவன். நெய்வோர் கை பசிவந்தால் நின்றுவிடும்; நெஞ்சம் தொய்வார்.... வாழ்வில் செம்மை சேராவிட்டால் சிந்தை கவர் ஒவியங்கள் எம் மை கொண் டெழுதத்தான் இயலும்? கஞ்சிக்குத் திண்டாடும் போதிங்கே தில்லைக்குச்செல்வார் யார்? வண்டாடும் மருதம் வறண்டால் பாடுவதார்? சோறு வடிக்கச் சுத்தமாய் இல்லையென்றால் வீறுமிகு வேல்வடிக்க விரும்பும் கொல்லன் யா இரைப்பை சுருங்கையில் எதிரிகளைச் சாடும் விறைப்பை உடைய வீரப் படைஞர் யார்? கோடையும் வசந்தமும் O