பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குத் தெரிந்ததோர் குருக்கள்.... ஈசனுக்கும் தனக்கும் சம்பந்தம் உண்டென்று சாதிக்கப் பார்ப்பார். வேதம் உயர்ந்ததென்று விரித்துரைத்தே பேதம் வளர்ப்பதற்குப் பெரிதும் வழி பார்ப்பார். மாலை உருட்டி மந்திரங்கள் முணுமனுத்து மேலான சாதியென்று வேடமிடப் பார்ப்பார். சாதகம் பார்ப்பார் சகுனம் பார்ப்பார் பாதகம் உண்டா என்று ராசிபலன் பார்ப்பார் மதியை இழந்திருக்கும் மானுடக்கும்பலிலே விதியை நுழைய விடப் பார்ப்பார்... ஒரு மாதிரியாய் வண்டி ஒட்டப் பார்ப்பார்.... எனக்குத் தெரிந்ததோர் முன்னாள் இளவரசர்; இன்றும் தனக்குக் கீழ்தான் இந்தத் தரணியே என நினைத்திடுவார் அரசு கட்டில் இல்லை. ஆனாலும் பத்திரிகை முரசு கொட்டி விளம்பரங்கள் முழக்கிடுவார் மான்வேட்டையாடுவார்... முடிந்தால் மனிதரையும் தான் வேட்டை யாடத் தயங்காமல் முன்வருவார். எனக்குத் தெரிந்ததோர் வியாபாரி.... பட்டப் பகலில் பலருக்கும் முன்னாலே நட்ட நடுத் தெருவில் நாகரிகமாய் வணிகம் என்னும் பெயரில் ஏமாற்றிப் கோடையும் வசந்தமும் 0 73