பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழை இலையில் வரிசையாய்ப் பரிமாறுகின்றான் அவன் வாழ்க்கை வெற்றிலை போல் மென்று விழுங்கப் படுகிறது. அட்சயபாத்திரமாய் அகிலத்துக்குதவுகின்றான் அவன் வாழ்க்கை எச்சில் இலை போல் எடுத்தெறியப்படுகிறது. Ο மேழி பிடிக்கும் கை மேலான கை என்றுரைத்து மெல்ல அவன் மென்னியைப் பிடிக்கவே கைகளை நீட்டும் காருண்யர் இங்கதிகம்; அவனிடம் தான் ஆட்சிச் செங்கோல் வரவேண்டும் என்று அண்ணல் காந்தி சொன்னதாய் ஆர்பரிப்பார்.... அவன் வீட்டுக்கு வைக்கோலும் வரவிடாமல் தடுக்கும் வள்ளல்கள் இங்கதிகம் அவன் உலகத்துக்கு ஆணி என்றோர் பாட்டை ஒப்பித்து கோடையும் வசந்தமும் O 75