பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாக்கப் போடப்படும் சட்டங்கள்! Ο நிலம் ஒரு பெண் என்றால் அவள் நலம் நுகர்வோன் எவனோ அவனே அவள் கணவன். நிலத்தைப் புணர்ந்து மனத்தைப் பூரிப்பில் நிறுத்தும் உழவனே கணவன். அந்த உரிமை உடையவனை கிழவன் என்றே நம் இலக்கியங்கள் சித்திரிக்கும்..... இப்போதோ. கையாலாகாத புதுமைக் கிழவர்கள் புறப்பட்டு விட்டார்கள்; கொண்டாடும் நிலமகளை இன்னொருவனிடம் கொடுத்துப் பெண்டாட விடுகின்றார். ஆண்மையற்ற அந்த அலிகளை விலக்கியே மேன்மைமிக்க உழவனை நிலமங்கை மறுமணம் புரிகின்ற புதுயுகத்தை நாம் படைப்போம். தவத்திரு அடிகளார்நடத்திய பாரி விழாவில் கலைஞர் தலைமையில் பாடியது. கோடையும் வசந்தமும் C 79