பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. கோப்பெருக்தேவியர் சமணர்களின் அச்சம் இச்செயலைக் கண்ட சமணர் அஞ்சினர். அரசனே நோக்கி, ' இதுவோ நம் சமயத்தைக் காக்கும் முறை? தாங்களே நம் சமயத்தைத் தக்கவாறு காத்தருள வேண்டும்; அவ்வேதியச் சிறுவர் இங்கு வந்தால் எங்கள் இருதிறத்தாரையும் தங்கள் வெப்பு நோயைத் தீர்க்குமாறு பணித்தருள்க' என்று வேண்டி நின்றனர். இந்நிலையில் சீர்காழிச் செல்வர், வேந்தன் பக்கம் வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் மன்னன் மனத்தில் அவனே அறியாமலே அவர்பால் மதிப்புண்டாயிற்று. அவன் தனது கோய்த் துன்பத்தையும் கோக்காமல் கை துக்கிப் பொன்னணேயைக் காட்டினன். சம்பக் தரும் அதன்மிசை அமர்ந்தார். அரசியார் அச்சமும் சம்பந்தர் ஆறுதலும் அரசன் சம்பந்தரை கோக்கித் தங்கள் நகர் எது ?" என்று வினவினன். அதற்கு விடையாகச் சம்பந்தர் சீர் காழிப்பதியின் பன்னிரு திருப்பெயர்களையும் அமைத்து இன்னிசைப் பாடல் ஒன்று பாடியருளினர். அதுகண்ட சமணர்கள் சினம் கொண்டு வாது செய்யத் தொடங் கினர். சமணர் செயலைக் கண்ட கோப்பெருந்தேவியார் பிள்ளையாருக்கு யாது நேருமோ என்று உள்ளம் குலைந் தார். அவரது நடுக்கத்தைக் கண்ட சம்பந்தர், பாண்டிமாதேவியை நோக்கி, மாபெருந்தேவியே! மயங்கவேண்டாம் : இவன் பால்மணம் மாருத பால யிைற்றே; இவனுக்குச் சமணர்களால் என்ன தீங்கு நேருமோ என்று ஏங்க வேண்டாம்; ஆலவாய்ப் பெருமான் இன்னருள் எனக்கு முன்னிற்கும்” என்று ஆறுதல் கூறியருளினர்.