பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கோப்பெருந்தேவியர் கொண்டிருந்த பாண்டியனின் உடற்கூன் திடீரெனத் திருவருளால் மறைந்தது. மாறனுகிய மன்னன் கின்றசீர் நெடுமாறன் ஆயினன். கூன்.பாண்டியன் நெடுமாறன் ஆதல் திருஞானசம்பந்தரின் அருள்நிறைந்த மறைமொழி வாழ்த்தில்ை உடற்கூன் மறையப்பெற்ற பாண்டிய மன்னன் அப்பெருமான வணங்கித் திருநீறு பெற்ருன்: சைவ சமயமே மெய்ச்சமயமெனப் போற்றி மகிழ்ந் தான். அவன் தன் மேனி முழுதும் வெண்ணிறு அணிந்து சிவம் பேணும் தவமுடையன் ஆன்ை. மன்னன் நிலையைக் கண்ட மதுரை நகர மாந்தர் அனை வரும் திருநீறு அணிந்து சிவநேசச் செல்வராயினர். இக் காட்சியினைக் கண்ணுரக் கண்டு களித்த பாண்டி மாதேவியாரும் குலச்சிறையாரும் திருஞானசம்பக் தரைப் பணிந்து அவரது திருவருள் திறத்தை வியந்து போற்றினர். அவர் அடியார் புடைசூழ ஆலவாய்த் திருக்கோவிலே அடைந்தார். ஆங்கு எழுந்தருளிய கண்ணுதற் பெருமானப் பண்ணமைந்த பாக்களால் பாடிப் பரவினர். பாண்டிய நாடு பைந்தமிழ்ச் சைவத் திருநாடாக மலர்ச்சி பெறுதற்கு அரும்பணி புரிந்து வந்த கோப்பெருந்தேவியையும் குலச்சிறையாரையும் தாம் பாடிய பதிகத்தில் வாயார வாழ்த்தினர். நெடுமாறன் கோப்பெருந்தேவியாய் விளங்கிய மங்கையர்க்கரசியாரின் மனத்திண்மையே நாட்டின் சமய மாற்றத்திற்குக் காரணமாயிற்று. அவர் ஆற்றிய அரும்பணியால் அவருடைய கணவனுகிய காவலன் நன்னெறி பேணும் புண்ணியன் ஆயினன். அவன் தனது உடற்கூனும் உளக்கூனும் ஒருங்கு நீங்கி