பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் குல மகளிர் 9. யைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளுமாறு செய்தனர். கொல்லேயில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்த கீரையைப் பறித்துக்கொணர்ந்து சுவைபடச் சமைத்து அவரது கொடும்பசியையும் அகற்றினர். தங்தையையும் தம் நாட்டையும் இழந்து பெருந்துயர் கொண்டு வருந்தும் நிலையிலும் மன்னர்குல மகளிராகிய அப் பாரி மகளிர் தம்மை நாடிவந்த புலவரைப் போற்றி விருந்துாட்டிய பெருந்தகைமையை என்னென்பது! பாரி மகளிரின் அன்பில் திளைத்த பைந்தமிழ் மூதாட்டியார் அவர்தம் அரிய பண்புகளேப் பலவாறு பாராட்டி மகிழ்ந்தார். பூதப்பாண்டியன் தேவி பூதப்பாண்டியன் என்னும் புலமை மிக்க பேரர சன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனேவியாகிய பெருங்கோப்பெண்டு என்பாள் அருந்தமிழ்ப் புலமை சான்ற அரசியாவாள். கற்பிலும் பொற்பிலும் சிறந்த காரிகையாவாள். அவளது அன்பு, அறிவு, அழகு ஆகிய பண்புகளில் உள்ளத்தைப் பறிகொடுத்த பாண்டியன் என்றும் அகலாது அவளுடன் இன்புற். றுக்கொண்டிருந்தான். அவன்பால் பகைமை கொண்ட சேரனும் சோழனும் பாண்டி நாட்டின்மீது படை யெடுத்தற்குப் பெரும்படை திரட்டும் செயலைப் பூதப் பாண்டியன் கேள்வியுற்முன், உடனே அவன் உள்ளத் தில் சினம் பொங்கியது. கையில் வாளுடன் கண் களில் சினப்பொறி பறக்க எழுந்து நின்று வஞ்சினம் ஒன்று கூறின்ை. ‘என்னுடன் எவர் வேண்டுமாயினும் போருக்கு வருக. போரில் எதிர்ப்பவர் எவராயினும் அவரைப் போர்க்களத்தில் அலறத் தாக்கி அவரது தேரும் பிற கோ.-2