பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

127

போல, அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள். தலையணையில் நீர் கண்கள் குளமாயின? அவளது வாசனை திரவியப் பூச்சுவேலை சேறாகிவிட்டது. ராதா தனது உண்மைக் காதலை நினைத்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள்! மறுநாள் காலை முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வரவேற்றாள்.

சிங்காரவேலுக்கு, அந்த முக வாட்டமே ஒரு புது மோஸ்தர், அழகாகத் தெரிந்தது. கோகிலம், கத்தரிப்பூக் கலர் சேலைதான் ராதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்து ஒரு மணி நேரத்திற்குள் ராதாவிடம் வருஷக்கணக்கில் பழகினவர்கள்போல் நடந்து கொண்டனர். ஒரே பேச்சு ! சிரிப்பு! கோகிலத்தின் குட்டிக் கதைகளும், சிங்காரவேலனின் ஹாஸ்யமும், ராதாவுக்குப் புதிது! அவைகள் அவளுக்குப் புதியதொரு உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்.

ஒருமுறை வழி தவறிவிடின் பிறகோ எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும்.

அத்தகைய ஒரு வளைவு! சிங்காரவேலர் — கோகிலா பிரவேசம்!

கோகிலா அழகியல்ல! ராதா அதைத் தெரிந்து கொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை உடை பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சில மணி நேரங்களில் ராதா கருப்பையா நட்பைக் கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் விஷயத்தைச் சிங்காரவேலருக்குக் கூறிவிட்டது. அவனது மூளை உடனே சுறு சுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

சிங்காரவேலரும், கோகிலமும் செல்வக்குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டுப் பிறகு, உல்லாசக் கள்ளராயினர்! கோகிலம் தம் கணவன் வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டு விட்டவள்! சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறைக்க