பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கபோதிபுரக்

மானத்தைக் காப்பாற்று. உன் காலடி விழுவேன்” என்று கருணாகரன் அழுதான்.

மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான்! “ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது” என்று பயந்தான்.

"மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவுகாலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த ராதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதைமீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச் செய்வேன், உஷார்” என்றான் பரந்தாமன்.

“ராதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்” எனச் சாகஸமாகக் கேட்டாள் கோகிலம்.

“அதிரசம்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.

யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக் கொண்டு வருவதாகக் கூறினாள்.

“புறப்படு” என்றான் பரந்தாமன்.

“போவோம்” என்றாள் கோகிலம்.

நள்ளிரவு! கோகிலமும் பரந்தாமனும் மெள்ள, சிங்காரவேலன் ஜாகை சென்றனர்.

கோகிலம், படத்தை அதன் “நெகடிவ்” உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, “நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே முன்னாளில் நீ ராதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன்