பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

147

சேதி யாவும். அன்றொருநாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான் நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை” என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.

பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.

“ஐயையோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா” என்று அலறினான் பொம்மன்.

“பிணம் தொங்குதேடா, பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு” என்று கூறினான் பொன்னன். கரியா, வராதா காத்தா, முத்து எனக் கூக்குரல் கிளம்பிற்று. அமிர்தம், கமலம், ஆச்சி, அகிலாண்டம் என்கிற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று. ‘கூவாதே! கிட்டே போகாதே!’ என்றனர் சிலர்.

“அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக் கூடாது,” என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.

“ஐயையோ! இது என் அக்கா புருஷனாச்சே” என்று அவறினாள் வேறொரு வீரி.

“ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டா அடடா! இது என்னடா அநியாயம்?” என்றான் பொம்மன்.

தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும், மக்களும், மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கூடிவிட்டனர்.

கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட ராதாவின் முகம் வெளுத்துவிட்டது.

அவள் புருஷன் அழுதேவிட்டான்.