பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கபோதிபுரக்

“பால் ஆறிப்போய் விடுகிறதே”

“ஆறட்டுமே” யாருக்கென்ன?

“விளையாட இதுதானா சமயம்.”

“சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ”

“சின்ன பிள்ளைபோல் விளையாட வேண்டாம். எனக்குத் தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்.”

“தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆராரிரோ பாடட்டுமா? தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா” என்று கூறிக்கொண்டே ராதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான். கணவன். ராதாவுக்குத் தன்னையும் அறியாமலே ஒரு சிரிப்பு வந்துவிட்டது.

“ஐயையோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ” என்று கேட்டுக் கொண்டே “இதோ பாருங்கள் இப்படி. என் மீது உமக்கு ஆசை தானே” என்றாள்.

தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான்.

“சத்தியமாக, ஆசைதானே” என்று கேட்டாள் ராதா.

“சாமுண்டி சாட்சியாக நிஜம்” என்றான் கிழவன்.

“அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்” என்றாள் ராதா.

“ஊ..ஊம் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்” என்றான் கிழவன். சொல்லிக் கொண்டே பால் செம்பை, ராதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும், கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது.

“இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே இந்த பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விட