பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


1950 திருச்சிச் சிறையில் ‘இலட்சிய வரலாறு’ எழுதுதல்.
1951 ‘ஆரிய மாயை’ நூலுக்குத் தடை
17–9–51 திராவிட நாடு பிரிவினை நாள் எடுத்தல்.
13,14,15,
16–12–1951
தி.மு.க. முதல் மாநில மாநாடு, சென்னையில்.
1–8–52 இந்தி எதிர்ப்பு அறப்போர் – இந்தி எழுத்துக்களை அழித்தல்.
25–4–53 திருச்சி மாவட்ட மாநாட்டில் ‘காதல் ஜோதி’ நாடகம் அரங்கேற்றம்.
15–6–53 ‘நம்நாடு’ நாளிதழ் தொடக்கம்.
13–7–53 மும்முனைப் போராட்டம் — முன் முனைப் போராட்டத் தூண்டிய குற்றம் சாட்டி மூன்று மாதம்சிறையிடல்
15–7–53 மும்முனைப் போராட்டம் — கழகத் தலைவர்கள் தொண்டர்கள் கைதாதல்.
3–5–54 மொழிவழி மாநில அமைப்பு அறிக்கை வெளியிடல்
14–1–55 சொர்க்கவாசல் திரையிடல்
20–2–56 தேவிகுளம் பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம்.
29–4–57 தமிழ்நாடு சட்டமன்ற தி.மு. கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.
9–6–57 ‘ஓம் லேண்டு’ ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்கல்
3–1–58 அண்ணா கைதாதல்
2–3–58 தி.மு.கழகத்தினை மாநிலக்கட்சியாகவும் உதயசூரியன் சின்னமாகவும் இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.