பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கோமளத்தின்

‘வன் தன்மீது சீறி விழாது, தன் எதிரில் நின்று சிரிக்கும்போது இது லிங்கமா? அவனது ஆவியா’ என்று சந்தேகிக்கும்படி தோன்றிற்று.

முகத்திலே பயங்கரமும், அசடும் தட்டிற்று. நாக்கிலே நீரில்லை. தொண்டையிலே ஒரு வறட்சி. தன்னையும் அறியாமல் கைகால்கள் நடுங்கின.

சோமு, கோமளத்தின் காலடியில் படுத்தது. சோமு, “என்னைப் போலவே உன்னிடம் மிக அடங்கி இருக்கிறான். பாபம்! அவனுக்கு என்ன கதியோ” என்றான் லிங்கம்.

கோமளத்தின் கண்களிலே நீர் ததும்பிற்று. “குமாரி கோமளா தேவி! வருந்தாதே இதற்குள். நான் உன் காதலன் லிங்கமல்லவா! நான் உன்னுடைய எத்தனையோ காதலரில் நானும் ஒருவன் என் பேச்சு உனக்கு கசப்பாக இருக்கிறதா? இதோ பார்! என்னிடம் பணமும் இருக்கிறது. உண்னுடைய நாகரிக வாழ்க்கைக்குப் பணம் வேண்டாமா! அதற்குத்தான் என் போன்றவர்களிடம் பணம் வந்து சேருகிறது. என்ன வேண்டும் உனக்கு. புதுமோஸ்தர் டோலக்கு, வைரத்தில் தேவையா? பூனாகரை பட்டு சேலை வேண்டுமா? உதட்டுக்கு உன்னதமான சாயம் வேண்டுமா, பாரிஸ் நகரத்து செண்ட், லண்டன் நகரத்து சோப், ஜெர்மனி மோட்டார், அமெரிக்க தேசத்து அத்தர், எது வேண்டும் கோமளம்? முன்பு நான் உன் வீட்டு வேலைக்காரனாக இருந்தேன். எனவே என் காதலுக்காக என் இதயத்தை, உழைப்பை, உணர்ச்சியை உனக்கு தத்தம் செய்தேன். இன்று நான் பணக்காரன். மானே, ஒரு கோடிக்கு மேல் என்னிடம் இருக்கிறது. கொட்டுகிறேன் உன் காலடியில். அதன் மீது நீ தாண்டவமாடு. என் மனதை மிதித்து என் வாழ்வைத் துவைத்த கோமளம் இன்று நீ எப்படி குமாரி கோமளா தேவியானாயோ அதைப்போலவே கைதியாக இருந்த நானும் கோடீஸ்வரனாகிவிட்டேன். என் நேசம் வேண்டுமா உனக்கு. நேரமிருக்குமா என்னையும் கவனிக்க. இதுவரை எத்தனை பேரை அடிமை கொண்டாயோ” என்று அடுக்கிக் கொண்டே போனான் லிங்கம். கோமளம் அழுதாள். கண்ணீர் தாடை வழியாக ஓடி வந்தது.