38
கோமளத்தின்
“எல்லாச் சாமிகளுந்தான் இரசவாதம் செய்யமுடியுமெனக் கூறுவது. ஆனால் ஏமாற்றந்தான்” என்றாள் கோமளம்.
“இருக்கலாம் அணங்கே! என் பேச்சு சரியோ, தப்போ? பிறகு பார்ப்போம். நான் இன்று ஒரு ஆரூடம் சொல்கிகிறேன். நாளை வரச்சொன்னேன். ஆண்டவனறிய வருகிறேன். நான் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று பாரும் அப்போது” என்று சாமியார் சொன்னார்.
“சொல்லும்” என்றாள் கோமளம்.
“சுகமும் துக்கமும் மாறிமாறி வரும். அது இயற்கை அம்மையே! இன்று சுகமாக இருக்கும் உன் தமையன் நாளை கைது செய்யப்படுவான். இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக—” என்றான் சாமியார். ‘என்ன? என் அண்ணா கைது ஆவதா?’ என்று திகைத்துக் கேட்டாள் கோமளம்.
பாபம்! நெஞ்சிலே பயம். குலை நடுக்கம்! மாதரசி மனம் நொந்து, “என்ன பயம்? நடப்பன நடக்கும் நானிலத்திலே. இதுவே முறை” என்றார் சாமியார்.
“சுவாமி! என்னை சோதிக்க வேண்டாம்” என்று கெஞ்சினாள் கோமளம். “மாதே! நான் ஏன் சோதிக்க வேண்டும். சோமேசன் என்னையன்றோ சோதிக்கிறார்” என்றார் சாமியார்.
“என்ன அது?” என்றாள் கோமளம்.
“உன் அண்ணனைக் காப்பாற்றி உன் மனதைக் குளிரவைக்க வேண்டுமென்று ஒரு எண்ணமும் என் உள்ளத்திலே எழுகின்றது. அதேநேரத்திலே அடாது செய்தவர்படாதபாடு படுவதன்றோ முறை! நாம் ஏன் அதிலே குறுக்கிட வேண்டுமெனவும் தோன்றுகிறது. ஆண்டவன் என்னை சோதிக்கிறான்” என்றார் சாமியார்.
“சுவாமி! எப்படியேனும் என் அண்ணாவைக் காப்பாற்றும். அவர் ஆபத்திலே சிக்கிக்கொண்ட தென்னமோ