பக்கம்:கோயில் மணி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கோயில் மணி

கோயிலுக்குப் போனார். அப்போதுதான் சாமிநாத குருக்கள் அபிஷேகம் தொடங்கியிருந்தார். “ஏன் ஐயா, இதற்குள் அபிஷேகம் முடிந்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்? மணி ஆறரை ஆகிறதே!” என்றார்,

“நான் என்ன செய்வேன்! ஆறேகாலுக்கே தீபாராதனை ஆகிவிடும். ஆனால் இந்தக் கடிகாரம் ஓடவில்லையே” என்று கோயிலில் இருந்த ஜாம்பவான் கடிகாரத்தைக் காட்டினர். முதலியாருக்குக் கோபம்வந்து விட்டது. அசுவமேத யாகபலன் கிடைக்காமல் போய் விட்டதல்லவா? ஏதோ கடபுடா என்று பேசி விட்டுப் போய்விட்டார். அந்தக் கோபத்தில் நேரே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குப் போனார், அங்கே பூசையெல்லாம் உரிய காலத்தில் ஆகியிருந்தது.

சாமிநாத குருக்களுக்கு அன்று மனசு சரியாகவே இல்லை. தர்மகர்த்தா கோபித்துக்கொண்டு போனது அவர் மனசை உறுத்திக்கொண்டே இருந்தது. ‘எல்லாம் ஈசுவரன் செயல்’ என்று எண்ணிக்கொண்டு அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை.


2

சாமிநாத குருக்கள் கோயிலுக்கு ஆராய்ச்சி மணி வாங்கிக் கட்டவேண்டும் என்று முயற்சி செய்கிற செய்தி ஊரே பரவியிருந்தது. முருக முதலியார், “இவர் ஒழுங்காகப் பூசை செய்வது தட்டுக்கெட்டுப் போகிறது! இதற்கு மணி வேறு” என்று அலுத்துக்கொண்டார். குருக்களோ தீட்சை வளர்க்கத்தொடங்கினார். “எதற்குத் தீட்சை?” என்றால், “ஆராய்ச்சி மணி கட்டவேண்டும்; அது கட்டின பிறகுதான் தீட்சை எடுப்பேன்” என்று செரல்லிக் கோயிலில் ஓர் உண்டியலே வைத்துவிட்டார். தினமும் ஒருவேளை சாப்பாடு என்ற நியமத்தை வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/10&oldid=1382738" இலிருந்து மீள்விக்கப்பட்டது