பக்கம்:கோயில் மணி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கோயில் மணி

திருவள்ளுவர்: இங்கே வந்த காரியம் யாதோ?

ஒட்டக்கூத்தர்: ஒன்றும் இல்லை; நான் கூத்தனூரில் ஒரு கலை மகள் கோயில் கட்டலாமென்று தொடங்கிவிட்டேன். கவிஞர்களிடம் பொருள் பெற்று அதைக் கட்டி முடிக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்காக ஒவ்வொரு புலவராகப் பார்த்து வருகிறேன். உங்களையும் பார்க்க வந்தேன். கம்பரும் இங்கே இருந்தது நல்லதாகப் போயிற்று.

திருவள்ளுவர்: புவிச் சக்கரவர்த்திகளுடன் பழகும் உங்களுக்குக் கோயில் கட்டுவதற்கு வேண்டிய செல்வம் கிடைக்காதா? இப்படிப் பல புலவரிடம் தொகுக்க வேண்டிய அவசியம் இல்லையே!

ஒட்டக்கூத்தர்: அப்படி இல்லை. கவிஞர்களின் தெய்வம் கலைமகள். அவள் தொண்டில் எல்லாப் புலவரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பது என் கருத்து. நான் இன்னும் பல இடங்களுக்குப் போகவேண்டும். உங்கள் பங்கை இப்போதே பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?

திருவள்ளுவர்: (உள்ளே சென்று ஒரு வெள்ளை ஆடையை எடுத்து வந்து கொடுத்து) வெள்ளைக் கலையுடுத்தும் கலைமகளுக்கு என் உழைப்பின் பயனான காணிக்கை இது.

ஒட்டக்கூத்தர்: (அதை அலட்சியமாக வாங்கிக்கொண்டு, கம்பரை நோக்கி) என்ன புலவரே, உமக்கு ஏதாவது கொடுக்க விருப்பம் உண்டா ?

கம்பர்: சடையப்ப வள்ளலிடம் கலந்துகொண்டு சொல்கிறேன்.

[ஒட்டக்கூத்தர் திடீரென்று புறப்பட்டுவிடுகிறார்.]

வல்லி: போகலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/104&oldid=1384081" இலிருந்து மீள்விக்கப்பட்டது