பக்கம்:கோயில் மணி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

5

மேற்கொண்டார். ஊரில் உள்ளவர்கள் பல வெண்கலப் பாத்திரங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பலர் அவருடைய உண்மையான விரதத்துக்கு மனம் உருகிப் பணம் கொடுத்தார்கள்.

மணியின் விலை 8000 ரூபாய். இரண்டரை அடி உயரம். அடித்தால் நாலு மைல் கேட்கும். எண்ணாயிரம் ரூபாய் மணிக்குக் கட்டிடம் முதலியன நாலாயிரம். எல்லாம் பதின் மூவாயிரத்துக்குத் திட்டம் போட்டாகி விட்டது. பணம் வரவேண்டுமே!

தீட்சையோடு அவர் கொண்ட விரதங்களில் மற்றொன்று, அம்பிகைக்கு அர்ச்சனை செய்வதில் வரும் வரும்படியை மணிக்குப் போட்டு விடவேண்டும் என்பது. அந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்கு உள்ளுர்ச் செட்டியாருடைய மைத்துனர் ஒருவர், பெரிய பணக்காரர், கோயம்புத்தூரிலிருந்து வந்திருந்தார். அவர் குருக்களுடைய விரதத்தை அறிந்து ஆயிர ரூபாய் கொடுத்தார். அதிலிருந்து குருக்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. வருகிறவர்கள் எல்லாம் நூறு, இருநூறு என்று கொடுக்கலானார்கள். “அயலூரான் அருமை அறிந்து ஆயிரம் கொடுக்கும்போது நாம் நூறாவது கொடுக்காமல் இருக்கலாமா?” என்று கொடுத்தார்கள்.

முதலில் குருக்களுடைய விரதத்தைக் கேட்டுப் பரிகசித்தவர்கள் இப்போது வியப்படைந்தார்கள். அவர் விரதத்தை நிறைவேற்றத் தாங்களும் துணை செய்ய முன் வந்தார்கள். பக்கத்து ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் கோயிலில் பெரிய மணி கட்டும் முயற்சியை எடுத்துச் சொன்னார்கள். எப்படியோ பதினாயிர ரூபாய் சேர்ந்து விட்டது. குருக்கள் நன்றாக விசாரித்துக் கும்பகோணத்தில் கோயில் மணி செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/11&oldid=1382741" இலிருந்து மீள்விக்கப்பட்டது