பக்கம்:கோயில் மணி.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

109

இவ்வளவுக்கும் அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தில் குமுதினி எவருக்கும் அடங்காதவள் என்று பெயர் வாங்கினவள். சுதந்தர உணர்ச்சி பெற்றவள் என்று ஆசிரியைமார்கள் பேசிக்கொள்வதுண்டு. இப்போது, அந்த உணர்ச்சி போய் அவள் அடிமையாகி விட்டாளா? இப்படி நினைப்பதே முட்டாள்தனம் என்று குமாரிக்குத் தோன்றியது.

இப்போது அதை எண்ணிப் பார்த்தாள். குமுதினி ஏற்றுக்கொண்ட இன்ப அடிமை வாழ்வுக்காக எதனை வேண்டுமானலும் தியாகம் செய்யலாம் என்று தோன்றியது.

குமாரிக்கு அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டாயின. அவரும் ஒரு பள்ளிக்கூடத் தலைமையாசிரியர்தாம். வயசு நாற்பது இருக்கலாம். வேலாயுதம் என்று பேர். தன்னைப்போல அவர் பேரை உடைத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். ஆசிரியர் கூட்டங்களில் அவரைத் தெரிந்துகொண்டாள். அவருடைய பண்பு அவளுக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் அதிகமாகவே அவருடன் பேசினாள். அம்மா போனதற்குப் பிறகு மனசு பொருந்தப் பேசுவதற்கு யாரும் இல்லை. அவரிடம் மனசு பொருந்துவது போல ஒரு பிரமை உண்டாயிற்று. ஒரு நாள், “நீங்கள் எங்கே குடியிருக்கிறீர்கள்?” என்று கேட்டு அவர் விலாசத்தைத் தெரிந்து கொண்டாள். ஏதோ ஒன்றைப் பற்றி விளக்கம் தெரிந்துகொள்ள அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தாள். அவர் வந்து பள்ளிக்கூட நிர்வாகம் சம்பந்தமாகக் குழப்பமாக இருந்த அரசியலார் உத்தரவை விளக்கமாகச் சொன்னார். இப்படியே இருவருக்கும் பழக்கம் முதிர்ந்தது. ஆனால் அந்த உறவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/115&oldid=1384105" இலிருந்து மீள்விக்கப்பட்டது