பக்கம்:கோயில் மணி.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

கோயில் மணி

னிடையே உள்ளத்தின் ஆழத்தில் உள்ள பூநரம்பைத் தொடும் உணர்ச்சி ஒன்றும் உண்டாகவில்லே. அவர் குடும்பி அல்லவா ?.

ஆனால் அன்று அவளுக்கு உலகம் மீண்டும் சுவையுடையதாகத் தோன்றுவது போல இருந்தது. காரணம் இதுதான் ; அவர் வந்திருந்தார். “அடுத்த முறை நீங்கள் வரும்போது உங்கள் மனைவியையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும்” என்று சொன்னாள் குமாரி. அவர் சற்றே தடுமாறிப் பிறகு தெளிந்து, “அதற்கு நான் பாக்கியம் செய்யவில்லை” என்றார்.

உடனே - குமாரியின் கற்பனை எப்படி எப்படியோ ஓடிவிட்டது. இவரும் நம்மைப் போலவே மணம் ஆகாதவரா ? இவர் வயசும் நம் வயசும்? கல்யாணம், கார்த்திகை... கொட்டு மேளம்... குழந்தை—எல்லாம் சினிமாவைப் போல அவள் உள்ளத்திலே ஓடின.

“என்ன யோசிக்கிறீர்கள்?” என்று வேலாயுதம் கேட்டார்.

“ஒன்றும் இல்லை. உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையேயென்று...”

“இல்லை, இல்லை. நான் மணமானவன்தான். ஆனால் இன்று அவள் இல்லை. என் கையில் ஒரு பச்சிளம் குழந்தையைக் கொடுத்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் அவள் நித்தியப் பொருளோடு கலந்துவிட்டாள்” -- ஒரு பெருமூச்சு.

“மன்னிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சியைக் கிளறிவிட்டேன்.”

அவர் விடை பெற்றுக்கொண்டார்.

அன்று இரவு அவளுக்குத் தூக்கமே இல்லை. அவரைப்பற்றித் தான் முதலில் நினைத்ததைப் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/116&oldid=1384109" இலிருந்து மீள்விக்கப்பட்டது