பக்கம்:கோயில் மணி.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

115

னும் முடிவு சொல்லவில்லை. நீ நன்றாக யோசிக்க இந்த ஒரு வாரம் போதுமானதென்றே எண்ணுகிறேன். நீயே தோற்றுவித்த சிறிய ஆவலுக்கு முடிவு காண ஆசைப்படுகிறேன்.”

இதைக் கண்டு அவள் பொருமினாள்; தான் தவறு செய்து விட்டதாக எண்ணினாள். இல்லை இல்லை, செய்ய இருந்த பிழையினின்றும் தப்பிவிட்டதாக எண்ணினாள். இரண்டு நாள் கழித்தே விடை எழுதினாள்.

“நன்றாக யோசித்துப் பார்த்தேன். ஏதோ அவசரத்தில் உங்களிடம் சொன்னேன். ஆனால் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு எனக்கு உண்டாகவில்லை. உங்கள் உள்ளத்தில் ஒருத்திக்குத்தான் இடம் இருக்க வேண்டும். ஆனால் என் இப்போதைய வாழ்க்கையில் எனக்கு ஒரு குறை இருக்கிறதை உணர்கிறேன். அதை நிரப்ப உங்களால் முடியும். நாம் முன்பு நினைத்தபடி அல்ல. நீங்கள் தயை செய்தால் எனக்கு அந்தக் குறை நீங்கும். எனக்கு ஒரு குழந்தை வேண்டும். நான் உங்களுக்கு மனைவியாக வர என் உள்ளம் தயங்குகிறது. ஆனாலும் உங்கள் குழந்தைக்குத் தாயாக இருக்கும் பேற்றை மாத்திரம் எனக்கு அருளுங்கள்.”

அவரிடமிருந்து வந்த கடிதம் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஆம், அப்போதே நினைத்தேன். முதலில் உணர்ச்சியால் நீ ஆசைப்பட்டாய், கன்னி ஆதலினால், வயசு ஆகிவிட்டதனால் சிறிது நிதானித்து ஆராய்ந்து உன் கருத்தைத் தெரிவித்திருக்கிறாய். இதை நான் வர வேற்கிறேன். உண்மையில் கடவுளே உனக்கு இந்த எண்ணத்தை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் குழந்தையின் வாழ்வுக்கு ஒரு பெண் ஆதாரம் ஆவதுபோல, நான் ஆக முடியுமா? உனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/121&oldid=1384119" இலிருந்து மீள்விக்கப்பட்டது