பக்கம்:கோயில் மணி.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

137

கிறாள்... கொஞ்சம் கஷ்டம். பார்க்கிறேன்” என்று பதில் சொன்னுள் தமயந்தி.

நளினிதான் எங்கிருந்தோ டெலிபோன் பண்ணினாள். தமயந்தி தாமதமாக வந்ததைப் பற்றிக் கேட்டாள். தமயந்தி தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றும், தன் அம்மா கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். இரவு பத்து மணிக் கூட்டத்துக்குத் தன்னுடன் வர வேண்டுமென்று நளினி சொன்னாள். கொஞ்சம் கஷ்டம் என்று தமயந்தி கூறினாள்.

தமயந்தி தன் வேலையைக் கவனிக்கப் புகுந்தாள். அப்போது ஆயா வள்ளி வந்தாள்; “தமயந்தி அம்மா, உனக்குப் புண்ணியமாப் போவுது. இந்தப் புள்ளைக்கு வேறே ஆயாவைப் பாக்கச் சொல்லம்மா. நம்மாலே முடியாது. எப்பப் பாத்தாலும் ஆயா ஆயான்னு தொணதொணக்குது. எங்க வூட்டுல்லே எம் மவ வந்திருக்குது. ரெண்டு கொளந்தைங்களோடே வந்திருக்கிறா. ஒரு மாசம் இருந்துட்டுப் போன்னு சொன்னேன். அந்தக் கொளந்தைங்களோடே போது போக்கலாமின்னா, நேரமில்லை” என்று முறையிட்டாள்.

"யாருக்குத்தான் இருக்கிறது? அதோ என் குழந்தை கண்ணைத் திறக்காமல் காய்ச்சலாய்ப் படுத்திருக்கிறது. என்னுடைய அம்மாள் இருந்தாளோ, பிழைத்தேனே? ரோஜாப்பூ வாடிக் கன்றிப் போகிறது போலக் குழந்தை வாடுகிறது. நான் பாவி! அதைக் கவனிக்க முடிகிறதில்லை. பழகின தோஷம்; இவளையும் விட முடிகிறதில்லை!”

“வூட்டுக்கு வூடு வாசப்படிதான் அம்மா! நான் இப்ப ஆட்டுக்குப் போகணும். இந்தக் கொளந்தை வுட மாட்டேங்குது. இதைப் பாத்தாலும் பாவமா இருக்குது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/143&oldid=1384220" இலிருந்து மீள்விக்கப்பட்டது