பக்கம்:கோயில் மணி.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

141

புறக்கணிப்பதால் வரும் தீங்கைக் காட்ட எத்தனையோ பேருடைய வாழ்க்கையிலிருந்து சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.”

அப்போது குழந்தை வெளியிலே எதையோ போட்டு உடைத்தது. “மோகன், மோகன், வேண்டாண்டா! நான் இட்டுக்கிட்டுப் போறேன். அம்மா இருக்கிறாங்களே, நீ சமத்தா விளையாடுன்னுதானே சொன்னேன்?” இது வள்ளியின் குரல்.

“நான் மாத்தேன் போ: எனக்கு அம்மா வேணாம்: போ. ஆயா வூட்டுக்குத்தான் வருவேன். சங்கனோடே தான் வெளையாடுவேன்.”

“ராஜா, நான் இட்டுக்கிட்டுப் போறேன். இப்ப நீ அம்மாவோடே இரு. நான் மார்க்கெட்டுக்குப் போகவேணும். நான் வூட்டுக்குப் போறபோது நீ வரலாம்.”

"நான் மார்க்கத்துக்கு வரேன். ஊ ஊம்.”

“மோகன், நீ நல்ல புள்ளை இல்லையா? அம்மா கோவிச்சுப்பாங்க. உன்னை அங்கெல்லாம் அழைச்சிட் போப்படாது.”

“அம்மா கோவிச்சுக்கட்டுமே; எனக்கு என்ன பயம்?”

“அப்பறம் உன்னை எங்கேயும் அனுப்பமாட்டாங்க.”

"நான் ஆயா வூட்டுக்கு ஓடி வந்துடறேன்."

உள்ளே நளினி சொல்லிக் கொண்டிருந்தாள்: “தாயின் நேர்ப் பராமரிப்பு இல்லாத குழந்தை அன்புக்காக ஏங்கிப்போகும். பிடிவாத குணம் உடையதாக இருக்கும். வேறு யாரிடமாவது அன்பு வைக்கப் பார்க்கும். இப்படியும் எழுதியிருக்கிறார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/147&oldid=1384227" இலிருந்து மீள்விக்கப்பட்டது