பக்கம்:கோயில் மணி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு மேய்க்கும் கண்ணன்

11

ராதா கல்யாணத்தில் பாகவதர்களுக்குச் சம்பிரமமான சாப்பாடு உண்டு. அதைவிட முக்கியமானது ஏழைகளுக்குச் சாப்பாடு. மற்ற எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நின்றாலும் ஏழைகளுக்கு உணவளிப்பது மாத்திரம் நிற்காது. இரண்டாயிரம் ஏழைகளாவது அன்று வயிறு நிரம்ப உண்டு பசியாறுவார்கள்.

இந்த உற்சவம் நடைபெறும்பொழுது கல்யாண நகர் முழுவதுமே கோகுலம்போலத்தான் இருக்கும். பஜனை சபை உள்ள வீதியில் எப்போதும் பஜனை ஒலி கேட்டுக்கொண்டிருக்கும். மாலையில் பாகவத பாராயணம். சகசிரநாம அர்ச்சனை, பெண்கள் கூடி நல்ல தோத்திரங்களைப் பாராயணம் செய்வது முதலியவை நடைபெறும். அந்த வீதி முழுவதுமே தெய்வ மணம் கமழும்.

அந்த வீதியில் ஒரு வீட்டுக்காரர் நாராயணன்; அவருடைய தர்மபத்தினி அம்புஜம்; அவர்களுடைய அருமந்த இளங் குழந்தை ராமமூர்த்தி அல்லது ராமு. ராமுவுக்கு ஆறு வயசு, எதைப்பற்றியும் தூண்டித் துருவிக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் இயல்புள்ளவன் அவன். மாலை நேரங்களில் உபந்நியாசம் நடக்கும்போது போய்க் கேட்பான். அவனுக்கு என்ன விளங்கப் போகிறது? கண்ணனுடைய குறும்புகளைப் பாகவதரோ பேசுகிறவரோ சொன்னால் அது கொஞ்சம் புரியும். ஆனால் குழந்தைக் கண்ணனுடைய படம் ஒன்று இருந்தது; அதை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருப்பான். அதில் அவனுக்கு இன்னதென்று சொல்ல முடியாத ஆனந்தம்.

அவன் கண்ணனைத் தன் மனக் கண்ணில் கற்பனை செய்து பார்க்கிறானோ? சில சமயங்களில் அவன் கண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/17&oldid=1382758" இலிருந்து மீள்விக்கப்பட்டது