பக்கம்:கோயில் மணி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கோயில் மணி

கொடு. அதனால் ஏழைக்கும் இன்பம், இவனுக்கும் திருப்தி உண்டாகும்.”

“சரிதான்; என்னையும் சேரிக்குப் போய் அந்தக் கிருஷ்ண பரமாத்மாவைத் தரிசனம் செய்யச் சொல்கிறீர்களோ?”

“கண்ணபிரான் ‘பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அனைந்து’ ஆயர்பாடியில் விளையாடினவன் தானே?”

“ஐயோ! போதுமே இந்த வேதாந்தம்!—எனக்குக் கைக் காரியம் இருக்கிறது.”

ன்று ராதா கல்யாணம், பிற்பகல் மூன்று மணி. ஏழைகளுக்குச் சாப்பாடு நடந்தது. குழந்தைகளையெல்லாம் தனியே ஓரிடத்தில் வைத்துச் சாப்பாடு போட்டார்கள். வீதியில்தான். வயசு வந்தவர்கள் ஒழுங்கின்றி, எனக்கு உனக்கு என்று கத்திக் கூச்சல் போட் டுக் குழப்பம் உண்டாக்கினார்கள். ஆனால் குழந்தைகளோ அமைதியாகச் சாப்பிட்டார்கள்;. முப்பது நாளும் நாமாவளி சொல்லி ஒழுங்காக இருந்து பிரசாதம் வாங்கி உண்ட பழக்கம்.

அந்தக் குழந்தைக் கூட்டத்தில் காத்தானாகிய கண்ணனும் இருந்தான். ராமு அவனைப் பார்க்கப் போனான். அன்று ராமுவின் வீட்டில் பாகவதர்கள் சிலர் சாப்பிட்டார்கள். அவர்களுக்குக் குஞ்சாலாடு போட்டார்கள். ராமு அம்மாவைக் கேட்டு வாங்கி இரண்டு குஞ்சாலாடுகள் வைத்திருந்தான். ஒரே சமயத்தில் வாங்காமல் வெவ்வேறு சமயத்தில் வாங்கி வைத்திருந்தான். தனக்காக என்றுதான் கேட்டான். ஒன்றைத் தின்றுவிட்டு மற்றொன்றை மறைத்துக் கொண்டு வந்தான்; காத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/26&oldid=1382769" இலிருந்து மீள்விக்கப்பட்டது