பக்கம்:கோயில் மணி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கோயில் மணி

இருந்தது. நீங்கள் எங்கே பால் வாங்குகிறீர்கள்?“ என்று கேட்டேன்.

“பால் வாங்குகிறதா? அதைப் போல முட்டாள் தனம் வேறு இல்லை” என்று ஒரு போடு போட்டார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“நானே மாடு வைத்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான பால் எனக்குக் கிடைக்கிறது” என்றார்,

நான் பாலுக்காகப் படும் தொல்லைகளை அவரிடம் விரித்துரைத்தேன். அவர் எப்படி மாடு வளர்க்க முடிகிறது என்று கேட்டேன். அவர் அது மிகவும் எளிய காரியம் என்று சொல்லித் தம்முடைய அநுபவத்தைக் கதை போலச் சொன்னார். அவர் கொடுத்த பாலைவிட அது சுவையாக இருந்தது.

“இருநூறு ரூபாய்க்கு மாடு கிடைத்தது. தினமும் ஒன்றரைப் படி பால் கிடைக்கிறது. என் மனைவியோ மாட்டைப் பாதுகாத்துக் கறக்கிறாள். அதற்குத் தீனி வாங்குவதில் கஷ்டம் இல்லை. தனிக் கடையே இருக்கிறது. நல்ல பசும் பால் குடிப்பதனால் குழந்தைகளுக்கு நோயே இல்லை.”

நான் நடுநடுவே கேள்விகளைக் கேட்டேன். அவர் விடை சொன்னார்.

“எங்கள் வீட்டுக்கு அதிகமாகப் பால் வேண்டுமே!” என்றேன்.

“பெரிய மாடு வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள்.”

“எருமைப் பால்தானே காபிக்கு வேண்டியிருக்கிறது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/36&oldid=1382793" இலிருந்து மீள்விக்கப்பட்டது